நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து 4.30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் […]
உலகப் பொதுமறை திருக்குறள். உலகப் பொது மனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ணம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. கடந்த சில ஆண்டுகளாகவே திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தப்பட்ட புகைப்படங்களை பகிர்தல், திருவள்ளுவர் சிலைக்கு சாயம் பூசுவது போன்ற செயல்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில், சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் திருவள்ளுவர் புகைப்படமானது அவர் முடியற்ற நிலையில், தலையில் வழுக்கையுடன், காவி உடையணிந்து கோயில் பூசாரி போன்ற தோற்றத்தில் இருப்பது […]
கலைமாமணி விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தமிழக அரசானது திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருதளித்து சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அதன்படி, 2019-20-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வாங்கும் திரைப் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பெயர் இடம்பிடித்திருந்தது. இதற்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 2019 மற்றும் 2020ம் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்த ஆசீர் என்ற விவசாயி கருப்பு நிற கேரட்டை பயிரிடுகிறார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர் என்ற விவசாயி. இவர் மலைக்காய்கறிகளை விவசாயம் செய்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் கருப்பு நிறத்தில் விளையக்கூடிய கேரட் விதைகளை விலைக்கு வாங்கி தனது நிலத்தில் பயிரிட்டுள்ளார். பொதுவாகவே கேரட் என்றாலே ஆரஞ்சு நிறத்தில் தான் காணப்படும். ஆனால் இந்த கேரட் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த கேரட் 90 […]
ஈரோடு ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி கட்டணத்தை, அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி 2018-ல் சுகாதாரத்துறை கீழ் வந்தது. சுகாதாரத்துறை கீழ் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட […]
தற்போதைய துணை வேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் புதிய துணை வேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் தேர்வு செய்ய தேடல் குழு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தேடல் குழு உறுப்பினராக முன்னாள் துணை வேந்தர் தியாகராஜன் என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட உடன் துணை வேந்தரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய துணை வேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரலில் […]
அமமுகவினர் எப்படிப்பட்ட வலையை வீசினாலும், அந்த வலையில் சிக்காத மீன்களாக தான் அதிமுகவின் சிங்கம் என்ற மீன்கள் இருப்பார்கள். நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஓபிஎஸ் நிச்சயம் மன உளைச்சலில் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். சசிகலா அணிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தால் நிச்சயம் வரவேற்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் டிடிவி தினகரனின் கருத்துக்கு […]
வாக்குறுதி அளிப்பதற்கு முன்பு தமிழக பட்ஜெட் விவரங்களை முக ஸ்டாலின் அறிந்து கொள்ளுமாறு அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், மதுரை செல்லூரில் கபடி வீரராகள் சிலையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். கலைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தத கலைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டது . பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, சிவகார்த்திகேயன், சௌகார் ஜானகி, ராமராஜன், தயாரிப்பாளர் ஐசரி வேலன், கலைப்புலி தாணு,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமீதா,இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. […]
அதிமுக அரசு, வழக்குகளை வாபஸ் பெறுகிறோம் என்ற நாடகத்தினால் பாவங்களை கழுவ முடியாது. தமிழ்நாடு முழுவதும், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது சட்ட ஒழுங்கு சீர்குலைவை தடுக்க பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக பதிவு […]
பிழை செய்யமாட்டேன், வரலாற்று சரித்திரம் படைப்பேன் என பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு உட்பட்ட கரைகளுக்கு இன்று சென்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அணி வகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதை ஏற்ற தமிழிசை முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் மருத்துவமனையை ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும் தங்களது முறை வரும்போது, கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு கொடுப்பது, அவர்கள் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள், […]
தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட வரும் 23-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் பிப்ரவரி 23-ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படள்ளன. சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மண்டல அலுவலகத்தில் இவ்விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். வரும் 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை […]
தமிழகத்தில் தான் அமைதியாக தேர்தல் நடக்கிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் வரவுள்ளதால், தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை மேற்கொண்டனர். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, பிற […]
‘தேர்தலில் நீங்கள் வெற்றி அடைந்தவுடன் நான் தான் முதல் ஆளாக வந்து உங்களை பாராட்டுவேன்.’ என மழலை மொழியில் ஸ்டாலினை வாழ்த்திய சிறுவன். தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்றங் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என ஒவ்வொரு தொகுதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இன்று பொள்ளாச்சியில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அந்த நிகழ்வில், ஸ்டாலினை முத்தமிட்ட […]
பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலை தினசரி அதிகரித்து வருகிறது. வாரிசுமையால் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது என்றும் இதற்கு மத்திய அரசுதான் காரணம் எனவும் எதிர்க்கட்சி குற்றசாட்டி வருகின்றனர். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் காரணம் முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக […]
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மக்களுக்கு சாதகமான பல திட்டங்களை வகுத்து வருகிறார். இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது சட்ட ஒழுங்கு சீர்குலைவை தடுக்க […]
பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் முகலாயர்கள் என்று கூறி பிரதமர் மோடியை கிண்டலடித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்தல் பேட்டை உயர்த்தி காண்பிப்பார்கள். அதுபோன்று பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததால், பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சரும் பேட்டை உயர்த்தி காண்பிக்க வேண்டியது தான் என்று விமர்சித்துள்ளார். இதனுடைய பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் மத்திய அரசு தான். […]
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு. தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் வரும் 24 வரை விருப்ப மனுக்களை பெற்று விண்ணப்பித்திட வேண்டுமென்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது வரு […]
சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்துடன் திடீர் சந்திப்பு. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீரென சந்தித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என கமல் கூறி வந்த நிலையில், சுமார் 45 நிமிடம் சந்திப்பு நிகழ்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று உடல்நலம் குறித்து நலம் விசாரித்ததாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் […]
ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா பகுதியில் காங்கிரசால் அமைக்கப்பட்ட 70 ஆண்டு பழமையான காந்தி சிலையை அகற்றி புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. கட்டுமான பணி சரியில்லை எனவும், இதற்கு உரிய அரசாணை வேண்டும் என்று கூறி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். […]