ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா பகுதியில் காங்கிரசால் அமைக்கப்பட்ட 70 ஆண்டு பழமையான காந்தி சிலையை அகற்றி புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. கட்டுமான பணி சரியில்லை எனவும், இதற்கு உரிய அரசாணை வேண்டும் என்று கூறி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியில் காரணமாக 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோத்தகிரியல் 9, குன்னுரில் 7, சோத்துப்பாறையில் 6, அலகாரியில் 5 […]
திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என முக ஸ்டாலின் அறிவிப்பு. பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதியையும் […]
மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் எனவும் தொண்டர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் அதிகரித்தாலும் இல்லை, அதிகார பொறுப்புக்கு வரபோகிறோம் என்ற சொல்லக்கூடிய இடத்திலும் இல்லை. இருப்பினும், இவ்வளவு நிதியை தந்திருக்கிறோம் என்று எண்ணி பார்க்கும் போது, மக்கள் 27 ஆண்டுகளாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும், ஆகவே நடக்கின்ற நிகழ்ச்சிகள், நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் உங்களுக்கு ஏமாற்றமாகவும், […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும் தேதியை அதிமுகஅறிவித்துள்ளது. அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ,முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அதிமுக சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 24 ,28 மற்றும் மார்ச் மாதம் 1 மற்றும் 2 […]
கரூர் மாவட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மற்றும் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்யபட்டுள்ளது. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா பகுதியில் காங்கிரசால் அமைக்கப்பட்ட 70 ஆண்டு பழமையான காந்தி சிலையில் பராமரிப்பு பணி என்ற பெயரில் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அதிகாலை 6 அடி உயர புதிய காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணி சரியில்லை எனவும், இதற்கு உரிய அரசாணை வேண்டும் என்று கூறி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட […]
காங்கிரஸ் கட்சியில் எதிர்காலம் இல்லாத காரணத்தால் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் -திமுக கூட்டணி 19 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.அரசுக்கு எதிராக பேசிய நிலையில் பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது. இதன் பின் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தநமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் […]
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 6-வது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார். நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மாநில முதல்வர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வேளாண்மை, உள் கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு, சேவை, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து […]
தென்காசி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பின்னர் பேசிய அவர், தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தி, இளைஞர்களின் வாழ்க்கையை காப்பாற்றுவது தான் திமுகவின் முதல் பணியாக இருக்கும் என கூறியுள்ளார். இனிமேல் தமிழக இளைஞர்கள் வேலைக்காக வேறு எந்த மாநிலத்திற்கும் […]
இன்று நடைபெறவிருந்த தலைமையாசிரியர் பதவி உயர்வுக்காக கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ராமநாதபுரம் கிடாத்திருக்கை அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஜோக்கப் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் 2020-ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தால் பலருக்கு புதிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய […]
சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுகிறது. கட்டண விவரம் : 0-2 கி.மீ வரை கட்டணம் ரூ.10 2 கி.மீ முதல் 5 கி.மீ வரை கட்டணம் ரூ.20 5-12 கி.மீ வரை கட்டணம் ரூ.30 12-21 கி.மீ வரை கட்டணம் ரூ.40 21 கி.மீ முதல் 32 கி.மீ […]
தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி சாத்தியமா? கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இது விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட, கடன் தள்ளுபடி 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், கார்த்திக் சிதம்பரம் அவர்கள், ‘தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிக் கடன் […]
திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனா அச்சுறுத்தலால் பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது தொற்று குறைந்து வருவதால், அரசு பாலா தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது, 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா […]
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததும் அனைத்து ஊர்களிலும் அதிமுகவினர் ரவுடியிசத்தை ஒடுக்குவது தான் முதல் வேலை. இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தேர்தல் வரும்போது மட்டும் வருவான் அல்ல நான் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் என்று தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து […]
புதுச்சேரியில் நடக்கும் குழப்பத்திற்கு அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தான் காரணம் என்று எல் முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பதவி ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் கூட்டணி பலம் 14 ஆகவும், எதிர்க்கட்சி கூட்டணி பலம் 14 ஆகவும் உள்ளது. இரு அணிகளுக்கு சமபலம் உள்ள நிலையில், வரும் 22ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, புதுச்சேரியில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு உரிமை உள்ளதால் […]
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில், சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்தியிலும் மாநிலத்திலும் நடப்பது மக்களை வாட்டி வதைக்கிற ஆட்சி […]
மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்காக நிதி திரட்ட ரத யாத்திரை […]