இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதிய தொழில் கொள்கையை வெளியிட உள்ளார். ஆளுநர் உரையில், புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதிய தொழில் கொள்கையை வெளியிட உள்ளார். இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, சென்னையை சேர்ந்த இஸ்லாமியரான ஹபீப் என்பவர் நன்கொடையாக ரூ.1,00,008 வழங்கியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. இதற்காக பல பிரபலங்கள், கட்டுமான பணிக்காக நன்கொடை வழங்கி உள்ளனர். அந்த வகையில், சென்னையை சேர்ந்த இஸ்லாமியரான ஹபீப் என்பவர் ராமர் கோவிலுக்கு நன்கொடையாக ரூ.1,00,008 வழங்கியுள்ளார். இந்த நன்கொடையை இவர் இந்து மக்கள் நிர்வாகிகளிடம் அளித்துள்ளார். இதுவரை ராமர் கோவில் கட்ட நன்கொடையாக ரூ.1.511 கோடி வசூலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களே சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. மேலும், தமிழ்நாட்டிற்கு ரூ.15,000, புதுச்சேரிக்கு ரூ.5000, கேரளாவிற்கு ரூ.2000 கட்டணத் தொகை என்றும் […]
விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், பாஜக – அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேரவையில் இடம் பெறுவார்கள். அனைத்து மாவட்ட மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக திமுக அரசு செயல்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியால் அனைத்து துறையிலும் தமிழகத்தை 50 ஆண்டு காலத்திற்கு பின்னால் இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலைமையை அடியோடு மாற்றி – இந்திய அளவில் தமிழகத்திற்கும் – தமிழக மக்களுக்கும் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், பெருமையையும் தேடித் தர வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கு. எனது […]
வருகின்ற 27-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வந்து ,மக்கள் பிரச்சனைகள் குறித்து கேட்டறிய உள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி பொங்கல் தினத்தன்று […]
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கலைஞர் நிற்பதாக எண்ணி அனைவரும் பாடுபட வேண்டும் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்பி கனிமொழி, ஜனநாயக வழியில் வந்திருக்க கூடிய ஒரு இயக்கம் திமுக. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கலைஞர் நிற்பதாக எண்ணி அனைவரும் பாடுபட வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசின் பின்னணியில் உள்ள அதிமுகவை எதிர்த்து தேர்தலை சந்திக்க போகிறோம் என்று […]
வரும் 17ம் தேதி 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்குகிறார். தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அதிமுக திட்டங்கள் மற்றும் சாதனை பட்டியலை விளக்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், வரும் 17ம் தேதி 6ம் கட்ட தேர்தல் […]
இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.ஒரு புறம் பெட்ரோல் ,டீசல் விலை தொடர்ந்து வந்தாலும் மறுபுறம் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்து உள்ளது.சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக அதிகரித்துள்ளது.நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது.இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் […]
தமிழகத்தில் ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றைக்கும் பலிக்காது என்று கோவையில் அமைச்சர் வேலுமணி பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்பி வேலுமணி, கொரோனா தொற்று காலத்தில் எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் காணாமல் போய்விட்டார் என்றும் தமிழகத்தில் ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றைக்கும் பலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
வரும் தேர்தலில் அமமுக இடம்பெறும் அணியே முதல் அணியாக இருக்கும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தீய சக்தியான திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக எங்கே இருக்கும், என்ன செய்வார்கள். நாங்கல்லாம் ரோட்ல கூட இருப்போம். ஆனால், அவர்கள் ரோட்ல கூட […]
அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அண்மை காலமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.ஒரு புறம் பெட்ரோல் ,டீசல் விலை தொடர்ந்து வந்தாலும் மறுபுறம் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்து உள்ளது.சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக அதிகரித்துள்ளது.நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது .ஏற்கனவே கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி ரூபாய் 25 உயர்த்தப்பட்டது. இதனால் […]
வெற்றிநடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார். இது வெற்றி நடை அல்ல, வெற்று நடை என முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் மக்கள் முன்னிலையில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழகத்தை சீர்குலைத்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தை சீர்குலைத்துவிட்டார்கள். ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதா, அதிலிருந்து மீள்வதற்கு 6 ஆண்டு காலம் ஆனது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு […]
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை பேரூரில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த பின் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழ் நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 16 லிருந்து 15 ஆக குறைந்துள்ளது என கூறியுள்ளார். பேரு காலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதம் பொறுத்த வரையில் 2030ல் அடைய வேண்டிய இலக்கை இப்போதே அடைந்துவிட்டோம். அந்த அளவுக்கு சுகாதாரத்துறை வெற்றிகரமாக, சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் […]
ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை நடத்தி வருகிறார் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் கோவையில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பேசுகையில், ஏழைகளுக்கு உதவி, தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது அதிமுக மட்டும்தான். சிலர் மற்றவர்களிடம் பிடுங்கி தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். விட்டுக்கொடுப்பவர்கள் […]
பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகத்தால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுசூழலை பாதுக்காக்கும் வகையில் மத்திய அரசின் உத்தரவின்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகன டேங்கிற்குள் தண்ணீர் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வாகனத்தை தண்ணீரால் கழுவும்போதும், மழை பெய்யும்போதும் தண்ணீர் பெட்ரோல் சேமிப்பு கலன்களில் கசிந்துவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். இதனால், […]
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் வழங்க அதிமுக தலைமைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.மேலும் கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் […]
நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில் அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்தார் .நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேடையில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.பின்பு பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள்.மேலும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை […]
நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து 4.50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் […]
ஊழல் படிந்த இரு கரங்களை பிரதமர் மோடி உயர்த்தி பிடித்துள்ளார் என்று முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் விமர்சித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை மெட்ரோ சேவை உட்பட பலத் திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடி, விழா நிறைவில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அழைத்து இருவரின் கைகளை உயர்த்தி பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பிரதமர் மோடி. இந்நிலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் […]