வரும் 17ம் தேதி 6ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் – தூத்துக்குடியில் தொடங்குகிறார் முதல்வர்.!

Chief Minister Palanisamy will begin the 6th phase of the election campaign in Thoothukudi on the 17th.

வரும் 17ம் தேதி 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்குகிறார்.

தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அதிமுக திட்டங்கள் மற்றும் சாதனை பட்டியலை விளக்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வரும் 17ம் தேதி 6ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்குகிறார். இதையடுத்து வரும் 18, 19ம் தேதிகளில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.