புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் புரெவி, நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்தடுத்து தாக்கிய இரு புயல்களால் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றை சரி செய்ய இந்த உதவி போதுமானதல்ல. இதனிடையே, புரெவி, நிவர் புயல் பாதிப்புகளை […]
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னையில் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு செல்கிறார். பின்னர், கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார்.அதனை தொடர்ந்து, ரூ.3770 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்து, வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் […]
நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 4.40 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை […]
இன்று பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி 10:30 அளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை வரும் மோடி இன்று சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவை, சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான 4-வது ரயில்பாதை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி […]
அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சமீபத்தில், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, பல்வேறு அரசு முறை திட்டங்களை திறந்து தொடங்கி வைப்பதற்கு வரவேண்டும் என்ற அழைப்பிதழை நேரடியாக வழங்கினார். இதனையடுத்து, பிரதமர் மோடி, இன்று, 10.30 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க்க உள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு […]
கருணாநிதி இல்லை என்றாலும், அவரின் எண்ணம், உணர்வு நம்முடன் இருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர், சிதம்பரம் புறவழிச்சாலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் பேசிய முக ஸ்டாலின், தகுதி இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக ஆகி உள்ளார் என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள். இன்னும் சொன்னால் அதிமுகவினருக்கே அந்த வருத்தம் இருக்கிறது என்று கூறியுள்ளார். சொந்த கட்சியை சேர்த்தவர்களே மதிக்கப்படாத முதலமைச்சர் தான் பழனிசாமி. தோல்வி பயம் முதல்வர் பழனிசாமிக்கு […]
7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அரசமைப்பு சாசன திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய அரசு. தேவேந்திர குலத்தான், கடையன், குடும்பன், பள்ளன், காலாடி, பன்னாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த சட்டத்திருத்த மசோதா அடுத்தகட்ட அமர்வில் விவாதத்திற்கு வர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மேலும் அரசமைப்பு சாசன […]
பத்து ஆண்டுகள் அதிமுக கட்சி ஆண்டிருக்கிறது, முதல் 5 ஆண்டுக்கு -100 மதிப்பெண் போட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். இதுகுறித்து காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திடம், தமிழக அரசியலில் இப்ப இருக்கின்ற ஆளும் கட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் வழங்குவீங்க என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கடந்த 10 ஆண்டுகள் அதிமுக கட்சி தமிழகத்தை ஆண்டிருக்கிறது, அதில் முதல் 5 ஆண்டுகளுக்கு -100 மதிப்பெண் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். […]
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். விருத்தாச்சலம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட முக ஸ்டாலின் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுதாரர் ஒவ்வொருவராக பேச வைத்தார். அப்போது, தனது கோரிக்கைகள் முன்வைத்த சிறுமி ஒருவர், திமுக தலைவர் முக ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வரானதும் விருத்தாச்சலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் எங்கள் ஊரில் எல்லா வசதியும் […]
ஏழை எளிய மக்களுக்கு உதவாத மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம். தமிழ் மக்களின் துச்சமென அதிமுக ஆட்சி மதிக்கிறது என ப. சிதம்பரம் கூறினார். மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகசட்டமன்ற தேர்தலில் தோற்போம் என்ற பயத்தால் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. மத்திய பாஜக அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப் பெரிய ஒரு மர்மம் உள்ளது. எதற்கு ரூ1000, 500 நோட்டு […]
தேமுதிகவின் 21வது கொடிநாள் கொண்டாட்டத்தின் போது ஊர்வலமாக சென்ற தேமுதிகவினர் 300 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் நேற்று தேமுதிகவின் கொடிநாளை முன்னிட்டு சாலிகிராமத்தில் இருந்து தேமுதிக தொண்டர்கள் காரில் அணிவகுத்தவாறு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது 75 வாகனங்களில் விதிகளை மீறி ஊர்வலமாக சென்றதால் தேமுதிக பகுதி செயலாளர் லக்ஷ்மணன் உட்பட 300 பேர் மீது விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். சட்டவிரோதமாக கூடுதல் நோய் பரப்பக்கூடிய வகையில் […]
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், திருவல்லிக்கேணியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, தமிழகத்தின் நண்பர் பிரதமர் மோடி மற்றும் பாஜக எனவும் தமிழகத்திற்கு எதிரி காங்கிரஸ் மற்றும் திமுக என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். சகோதரி […]
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்பர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவார் எனவும் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமாக்கப்பட்டதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம் என்று அதிமுகவை விமர்சனம் செய்துள்ளார். மேலும், திமுக கூட்டணிக்குக் கமல்ஹாசன் வரவேண்டிய அவசியம் இப்போது […]
மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய், பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது என்று பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்தது காவல்துறை. இந்த துயர சம்பவம் அறிந்து பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், […]
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சாத்தூர் அருகே கர்ப்பிணி உட்பட 19 பேர் உயிரிழக்க காரணமான […]
பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகிறது. சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அரசு முறை திட்டங்களை திறந்து தொடங்கி வைப்பதற்கு வரவேண்டும் என்ற அழைப்பிதழை நேரடியாக முதல்வர் வழங்கினார். இதைத்தொடர்ந்து, பிரதமர் பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தரவுள்ளார். பிரதமர் மோடி நாளை 10.30 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் முதல்வர், துணை முதல்வர் […]
மக்கள் வீட்டில் இருந்தபடியே சேவையை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தற்போது வெவ்வேறு அரசு துறைகள் தங்களுக்கு என்று தனித்தனியாக துறைவாரியாக குறைதீர் மையங்கள் மற்றும் இணையதளங்களை செயல்படுத்தி வருகின்றனர்.மாவட்ட அளவில் திங்கள் கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் ,மாதாந்திர மனு நீதி நாள் ,விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் உள்ளிட்டவையும்,மாநில அளவில் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்டவை மூலமாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.இதனால் ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை […]
உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது, உடனடி நடவடிக்கை தேவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று பிற்பகல் மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் நேற்றுவரை 15 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 19ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு பிரதமர், முதல்வர் உள்ளிட்டவர்கள் […]
அனைத்து துறைகளிலும் அதிமுக அரசில் ஊழல் நடைபெற்றதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். விருத்தாச்சலம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட முக ஸ்டாலின் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசிய அவர், மாதம் ரூ.5,000 கொடுங்க என்று நான் சொன்னேன், காதுல கேட்காதது போல் முதல்வர் பழனிசாமி இருந்தார். ஆனால் கோடிக்கணக்கான பணத்தை கான்ட்ராக்ட் நபர்களுக்கு கொட்டி கொடுத்துள்ளார். கொரோனா காலத்திலும் டெண்டர் முறையில் செய்தார்கள். அப்போது, […]