கமல் வரவேண்டிய அவசியமில்லை., மு.க ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி – வைகோ

MDMK General Secretary Vaiko has confirmed that DMK leader MK Stalin will become the Chief Minister.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்பர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவார் எனவும் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமாக்கப்பட்டதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம் என்று அதிமுகவை விமர்சனம் செய்துள்ளார். மேலும், திமுக கூட்டணிக்குக் கமல்ஹாசன் வரவேண்டிய அவசியம் இப்போது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.