உலகம்

சீனா தலைநகரில் வெள்ள பாதிப்பு: 33 பேர் பலி, 18 பேர் மாயம்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 18 பேர் காணவில்லை என்று கூறப்படுகிறது. பெய்ஜிங்கின் வடக்கு பகுதிகளில் தொடர்ந்து கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங்கின் மேற்குப் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழையால் 59,000 வீடுகள் இடிந்து விழுந்தன, ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று அந்நகரின் அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவின் பிற பகுதிகளும் கடும் வெள்ளப்பெருக்கால் மூழ்கியுள்ளது. வடக்கு […]

2 Min Read
Beijing flood

சந்திராயன்-3க்கு போட்டியாக களமிறங்கும் ரஷ்யாவின் லூனா-25.! விறுவிறுப்பாகும் நிலவின் தென் துருவ பயணம்…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலமானது கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்வதாக இரண்டாவது முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை  சந்திராயன் 2 விண்கலத்தில் கிடைத்த அனுபவங்கள் மூலம் சிறு சிறு குறைகள் சரி செய்யப்பட்டு, சவால்களை சமாளிக்கும் […]

7 Min Read
Chandrayaan 3 - Luna 25

ஜெர்மனியில் பரபரப்பு! 2ம் உலகப் போர் வெடிகுண்டு கண்டெடுப்பு..13,000 பேர் அவசர அவசரமாக வெளியேற்றம்!

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி மீது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களை அந்நாட்டு அரசாங்கம் அவசர அவசரமாக வெளியேற்றி உள்ளது. இதனால், ஜெர்மனியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதாவது, ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ப் பகுதியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு அருகில் இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட 1 டன் எடையுள்ள வெடிக்காத நிலையில் ஒரு வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதி உள்ள குடியிருப்பாளர்களை […]

7 Min Read
World War II Bomb Found

சிறையில் இம்ரான் கான்.. ஆட்சியை கலைக்கும் ஷேபாஸ் ஷெரீப்.! வெகு விரைவில் தேர்தலை சந்திக்கும் பாகிஸ்தான்.!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் ஒரு ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு சொந்தமான பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்றதன் பெயரில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தால், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஐந்து வருடங்களுக்கு தேர்தலில் பங்கேற்க முடியாது என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரிஃப் தனது பதவிக்காலம் முடிவதற்கு […]

4 Min Read
pakistan pm shehbaz sharif - Imran khan

27 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய தாய்லாந்து மன்னரின் மகன்..!

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் இரண்டாவது மூத்த மகனான வச்சரேசோர்ன் விவச்சரவோங்சே, 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது தாயகம் திரும்பியுள்ளார். நியூயார்க்கில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் வச்சரேசோர்ன், தனது தாயகம் வந்தவுடன் அரச குடும்பத்தால் ஆதரிக்கப்படும் ஆதரவற்ற குழந்தை பராமரிப்புக்கான அறக்கட்டளைக்குச் சென்று, அங்குள்ள அனைவரிடமும் நலம் விசாரித்தார். பிறகு, 2016ம் ஆண்டு இறந்த தனது தந்தை மற்றும் அவரது தாத்தா மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு முன்னால், ஜீன்ஸ் […]

3 Min Read
Vacharaesorn

தடம் புரண்ட பயணிகள் ரயில்! கனமழையால் ஏற்பட்ட விபரீதம்!

கிழக்கு ஸ்வீடனில் 100க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில், ஹுடிக்ஸ்வால் என்ற நகரம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. கனமழையின் காரணமாக ரயில்வே கரை ஓரமாக அடித்துச் செல்லப்பட்டு, மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

2 Min Read
train in Sweden

இத்தாலி கடற்கரையில் படகு மூழ்கி விபத்து..! 4 பேர் உயிரிழப்பு..51 பேர் மாயம்..!

இத்தாலிய தீவான லம்பெடுசாவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் மூழ்கியதில் ஒரு பெண் மற்றும் அவரது ஒரு வயது குழந்தை உட்பட குறைந்தது 4 பேர் இறந்துள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து ஒரு படகில் 48 பேரும் மற்றொரு படகில் 42 பேரும் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு பிறகு முதலில் ஒரு பெண் மற்றும் அவரது ஒரு வயது குழந்தையின் உடல்களை […]

3 Min Read
Boatsink

மொரொக்கோவில் மினிபஸ் கவிழ்ந்து 24 பேர் உயிரிழப்பு..!

வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரொக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில், டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக, விபத்துக்கான காரணத்தை கண்டறிய காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் காசாபிளாங்காவின் கிழக்கே பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மொராக்கோ உள்பட பிற வட ஆப்பிரிக்க நாடுகளின் சாலைகளில் அடிக்கடி […]

2 Min Read
Accident IMG

பாகிஸ்தானில் தடம் புரண்டது ஹசாரா விரைவு எக்ஸ்பிரஸ் 15 பேர் பலி

பாகிஸ்தானில் ஹசாரா விரைவு ரயிலின் பத்து பெட்டிகள் தடம் புரண்டதில் 15 பேர் உயிரிழப்பு. பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  ராவல்பிண்டி ரயில் நிலையம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த  ஹசாரா எக்ஸ்பிரஸின் 10 ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 15 பேர் உயிரழிப்பு என்றும்  மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர் என  உள்ளூர் செய்தி சேனல் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்த […]

3 Min Read
Hazara Express derailed

இலவச பிளேஸ்டேஷன் அழைப்பால் கூடிய கூட்டம்! பிரபல யூடியூபரால் வெடித்த வன்முறை!

நியூயார்க்: மன்ஹாட்டனின் யூனியன் ஸ்கொயர் பூங்காவில் வீடியோ கேம் கன்சோல்களை வழங்கத் திட்டமிட்டிருந்த நிகழ்வில், பல ஆயிரம் இளைஞர்கள் வருகை தந்ததால் கூட்ட நெரிசலில் வன்முறை வெடித்தது. பிரபல சமூக வலைத்தளமான யூடியூப் மூலம் பிரபலமானவர் காய் செனாட் (Mr. Cenat ). Mr. Cenat இன் யூடியூப் சேனலை 3.6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. எனவே தன்னுடைய ரசிகர்களுக்கு  பிளேஸ்டேஷன் 5 கன்சோல்களை வழங்கலாம் என முடிவெடுத்து ஸ்கொயர் பூங்காவில் தான் இதனை வழங்கப்போவதாக […]

4 Min Read
Mr. Cenat

ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைக்கு பதில், வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை? ஆய்வில் வெளியான தகவல்..!

டெக்சாஸ் ஏ&எம் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனம் ஒரு ஆய்வாய் மேற்கொண்டுள்ளனர்.  அந்த ஆய்வில், பெரும்பாலான அலுவலக ஊழியர்கள்  வெள்ளிக்கிழமைகளில் மிகவும் சோர்வாக செயல்படுவதாக அந்த அறிக்கையில் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை மற்றும் மதிய நேரங்களில் பெரும்பாலான அலுவலக ஊழியர்கள் தங்களது வேலைகளில் தவறு செய்வதாக தெரிவித்துள்ளனர். ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2018 வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் டெக்சாஸில் உள்ள ஒரு பெரிய எரிசக்தி நிறுவனத்தில் 789 அலுவலக […]

3 Min Read
work and sleep

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை.! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

பாகிஸ்தான் : அரசு பதவியில் வகிப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பரிசு பொருட்கள் அனைத்தும் அரசு கருவூலத்தில் பாதுகாத்து வைக்கப்படும். அது அரசுடைமைக்கப்பட்ட பரிசுப்பொருட்களாக மட்டுமே பார்க்கப்படும். அதனை தவறாக பயன்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்த போது தனக்கு வந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் வைக்காமல், தனது வீட்டிற்கு கொண்டு சென்றார் என அவர் மீது இஸ்லாமாபாத் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை […]

4 Min Read
Former Pakistan PM Imran khan

மெக்சிகோவில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து..! 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

மேற்கு மெக்சிகோவில் அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பேருந்து அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்ன்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது, சாலை வளைவில் பேருந்து வேகமாக சென்று திரும்பியதால் பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் இந்தியா, டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 40 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்களை […]

3 Min Read
MexicoBusAccident

பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் ஆகஸ்ட் 9ம் தேதி கலைக்கப்படும்.! பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவிப்பு..!

பாகிஸ்தான் பாராளுமன்றம் பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, வரும் ஆகஸ்ட் 9ம் தேதி பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாக பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். நேற்று (ஆகஸ்ட் 3ம் தேதி) ஆளும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் பிரதமர் மாளிகையில் விருந்து ஒன்று நடைபெற்றது. அந்த விருந்தில் நாடாளுமன்றத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முறையான அறிவிப்பை பிரதமர் ஷெஹ்பாஸ் ஆகஸ்ட் 9ம் தேதி குடியரசுத் தலைவர் ஆரிஃப் ஆல்விக்கு […]

3 Min Read
Shehbaz Sharif

பெண்களுக்கு இனி வாட்ஸ்அப்பில் ‘Heart’ அனுப்பினால் ஜெயில் தான்!

குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டு இஸ்லாமிய நாடுகளில், இப்போது, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இதய ஈமோஜியை (Heart) அனுப்பினால், இனி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இரு நாட்டு அரசுகளும் ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். கடந்த ஜூலை 30-ம் தேதி குவைத் வழக்கறிஞர் ஹயா அல்-ஷல்ஹியின் கூற்றுப்படி, இந்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2000 தினார் இந்திய மதிப்பில் (ரூ.5,35,584) அபராதம் விதிக்கப்படும். […]

3 Min Read
whatsapp heart emoji

ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷ்ய கடற்படை தளத்தை தாக்கிய உக்ரேன்!

உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் சிவிலியன் கப்பலுக்கு துணையாக சென்ற தனது போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த ஒரு வருடமாக கடுமையான போர் நடந்து வருகிறது. உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து தானியங்களை பாதுகாப்பான ஏற்றுமதிக்கு அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ரஷ்யா கடந்த மாதம் மறுத்ததில் இருந்து கருங்கடல் மற்றும் அதை ஒட்டிய துறைமுகங்களில் மோதல்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், உக்ரைனின் தானிய துறைமுகங்களை ரஷ்யா தாக்கியது. இந்நிலையில், ரஷ்ய ஏற்றுமதிக்கான முக்கிய […]

3 Min Read
Ukraine attacked Russian

குற்றமற்றவர் டொனால்ட் டிரம்ப்.! அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 28இல்.! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அவர் முயற்சிக்காகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தேர்தல் அதிகாரிகளுக்கு இடையூறு கொடுத்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக டிரம்ப்புக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நேற்று அவர் வாஷிங்டன் […]

4 Min Read
Donald Trump

போதைப்பொருள் கடத்தல் வழக்கு..! சிங்கப்பூரில் 2 வாரத்தில் 3வது கைதிக்கு தூக்கு தண்டனை..!

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக இரண்டு வாரங்களில் மூன்றாவது கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினாரால் முகமது ஷல்லே அப்துல் என்பவர் 54 கிராம் (1.9 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதன்பின் சிங்கப்பூரின் சாங்கி சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரின் சட்டத்திட்டங்கள் படி, 500 கிராம் (17.6 அவுன்ஸ்) கஞ்சா மற்றும் 15 கிராம் (0.5 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை […]

3 Min Read
SingaporePrison

இனி ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே..? குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்கும் சீனா..!

சீனாவின் இணைய கண்காணிப்பு அமைப்பான சைபர்ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் சீனா (சிஏசி), குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை வகுத்துள்ளதோடு, அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மொபைல் சாதனங்களில் பெரும்பாலான இணைய சேவைகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 16 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த முடியும். […]

4 Min Read
ChildUseSmartPhone

போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் போலீசார் சோதனை..! 45 பேர் சுட்டுக்கொலை..!

பிரேசிலின் மூன்று மாநிலங்களில் போதைப்பொருள் கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய சோதனையில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, ரியோ டி ஜெனிரோவில் உள்ள காம்ப்ளெக்சோ டா பென்ஹா பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காம்ப்ளெக்சோ டா பென்ஹாவில் போதைப்பொருள் கடத்தல் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். […]

5 Min Read
BrazilianPolice