இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeleo [Image Source : Twitter]
படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeleo [Image Source : Twitter]
இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று அங்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அதற்கான வீடியோ ஒன்றை வெளியீட்டு படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
unknown nodeThe Crew Behind #LEO [Image Source : Twitter]
இதனையடுத்து, லியோபடத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை சென்னையில் வரும் மார்ச் 29-ஆம் தேதி முதல் பிரசாத் ஸ்டூயோவில் தொடங்குகிறது. அங்கு 17 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது சென்னை ஷெட்யூலை முடித்த பிறகு, இறுதி அட்டவணைக்காக ஐதராபாத் அணிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.