தமிழில் '50' கோடி...தெலுங்கில் '30' கோடி...வசூல் வேட்டையில் "வாத்தி".!

திருச்சிற்றம்பலம், நானே வருவேன், தற்போது வாத்தி ஆகிய 3 படங்களும் தனுஷிற்கு தொடர்ந்து வெற்றியை கொடுத்துள்ளது என்றே கூறலாம். இதில் 'வாத்தி " திரைப்படம் கடந்த

திருச்சிற்றம்பலம், நானே வருவேன், தற்போது வாத்தி ஆகிய 3 படங்களும் தனுஷிற்கு தொடர்ந்து வெற்றியை கொடுத்துள்ளது என்றே கூறலாம். இதில் ‘வாத்தி ” திரைப்படம் கடந்த 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

unknown node

Vaathi Blockbuster [Image Source : Google ]

இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சாமியுக்தா மேனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தமிழில் “வாத்தி” என்ற பெயரிலும், தெலுங்கில் “சார்” என்ற பெயரிலும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 700 திரையரங்குகளில் வெளியானது என்றே கூறலாம்.

unknown node

Vaathi box offfice [Image Source : Google ]

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த மக்கள் பலரும் படம் மிகவும் அருமை என்றே கூறி வருகிறார்கள். படம் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.

unknown node

Vaathi [Image Source : Google ]

இந்நிலையில், தற்போது படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் படம் 50 கோடியும், தெலுங்கில் 30 கோடி என மொத்தமாக 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படம் விரைவில் 100 கோடி வசூலை கடந்துவிடும் என தெரிகிறது.