இந்தி சினிமாவில் புதிய சாதனை...1000 கோடியை நெருங்கும் 'பதான்' வசூல்.!

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வசூலில் பல சாதனைகள் படைத்து வருகிறது. 4 -ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வசூலில் பல சாதனைகள் படைத்து வருகிறது. 4 -ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படமும் அருமையாக இருப்பதால் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

unknown node

Pathan Box Office [Image Source : Twitter]

மேலும், பாலிவுட்டில் இருந்து சமீபத்தில் வெளியான எந்த படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால், ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்த பதான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இந்தி சினிமாவையே அதிரவைத்துள்ளது என்றே கூறலாம்.

unknown node

இந்நிலையில், படம் வசூல் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலை நெருங்கியுள்ளது. அதன்படி, படம் இதுவரை உலகம் முழுவதும் 946 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 588 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

unknown node

Pathan[Image Source: Google]

மேலும், பதான் திரைப்படம் தான் இந்தி மொழியில் வெளியாகி அதிகம் வசூல் செய்த இந்தி திரைப்படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இதனை ஷாருக்கான் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் விரைவில் 1000 கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.