வெல்லுவான் புகழ் அள்ளுவான்...அகிலமெங்கும் '1000' திரையரங்கில் வெளியாகும் 'ஆளவந்தான்'.!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முன்னதாக வெளியான படங்கள் புதிய டிஜிட்டல் ஒளி அமைப்பில் ரீ கிரியேட் செய்து ரீ-ரீலிஸ் செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முன்னதாக வெளியான படங்கள் புதிய டிஜிட்டல் ஒளி அமைப்பில் ரீ கிரியேட் செய்து ரீ-ரீலிஸ் செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி நடித்த பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

unknown node

Aalavandhan [Image Source : Google]

அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான “ஆளவந்தான்” திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார்.

unknown node

புதிய டிஜிட்டல் ஒளி செய்யப்பட்டு படம் கிட்டத்தட்ட அகிலமெங்கும் ‘1000’ திரையரங்கில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் தற்போது உற்சாகத்துடன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-தனுஷோட அந்த பிளாக் பஸ்டர் படத்தை மிஸ் பண்ணிட்டேன்…வருத்தப்பட்ட நடிகர் பரத்.!

unknown node

Aalavandhan Movie [Image Source : Google]

மேலும், விரைவில் “ஆளவந்தான்” திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.