இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “அகிலன்”. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
unknown nodeAgilan movie [Image Source : Google ]
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தை பார்த்த மக்கள் பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 500 திரையரங்குகளுக்கு மேல் வெளியான இந்த படம் முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
unknown nodeAgilanFromMarch10 [Image Source : Google ]
அதன்படி, அகிலன் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் 4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதால் வரும் நாட்களில் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeAgilan [Image Source : Twitter]
மேலும், கடைசியாக ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த கோமாளி திரைப்படம் 2019-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதனை தொடர்ந்து பூமி ஓடிடியில் வெளியாகி இருந்தது. ஜெயம் ரவி தனியாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த திரைப்படம் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.