நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.!

ajith kumar

Ajith Kumar: நடிகர் அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான முழுமையான காரணம் என்னவென்று தெரியவில்லை.

READ MORE – படம் தோல்வி..நான் நடிக்கவே வரல விடுங்க..வேதனைப்பட்ட கேப்டன் விஜயகாந்த்

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார். இப்பொது சென்னையில் இருக்கும் அவர், படப்பிடிப்புஅஜர்பைஜானில் நடந்து வந்து வரும் நிலையில், வருகின்ற 15 ஆம் தேதி விடாமுயற்சி படத்திற்காக வெளிநாடு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

இதனால், தனது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகர் அஜித்குமார் சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை வீடு திரும்புவார் என அஜித்குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE – எல்லாம் ஓரம் போங்க..இனிமே சிவகார்த்திகேயன் தான்…அதிர வைத்த அமரன் ஓடிடி விலை?

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்