கொரோனாவில் இருந்து குணமடைந்த நடிகை ஆண்ட்ரியா.!!

Actress Andrea has revealed on her Instagram page that she has fully recovered from Corono

கொரோனாவில் இருந்து தான் முழுமையாக குணமடைந்து விட்டதாக நடிகை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் ஆண்ட்ரியா வுக்கு கடந்த 6 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது கொரோனா உறுதியானதை தொடர்ந்து வீட்டில் தனிமை படுத்தி கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவர்கள் அறிவுரை படி மருந்துகளை உட்கொண்டு தற்போது குணமடைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node