கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிகர் தனுஷ்..??

It has been reported that actor Dhanush will next be seen in a new film directed by Karthik Thangavel.

நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு தி க்ரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் 2, நானே வருவேன், போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு. அடுத்ததாக அடங்காமறு படத்தின் இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.