பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
70-வது பிறந்த நாளை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடி வருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இந்த கடினமான நேரத்தில், அதிகம் வலு சேர்க்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node