மேடையில் திடீரென சட்டையை கழற்றிய சல்மான் கான்...வைரலாகும் வீடியோ.!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது "கிசி கா பாய் கிசி கி ஜான்" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஃபர்ஹாத் சம்ஜி என்பவர்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது “கிசி கா பாய் கிசி கி ஜான்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஃபர்ஹாத் சம்ஜி என்பவர் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, ஷெஹ்னாஸ் கில், வெங்கடேஷ் டக்குபதி, சித்தார்த் நிகம், பாலக் திவாரி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

KisiKaBhaiKisiKiJaan

இந்த படம் தமிழ் அஜித்குமார் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் தான் “கிசி கா பாய் கிசி கி ஜான்” . இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில் சல்மான் கான், பூஜா ஹெக்டே,  உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.

unknown node

SalmanKhan

இந்நிலையில், அப்போது  விழாவின் மேடையில் பேசிக்கொண்டிருந்த சல்மான் கான் தனது சட்டையை வேகமாக கழட்டினார். படத்தில் அவர் காட்டும் சிக்ஸ் பேக்ஸ்  எல்லாம் வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் என விமர்சனம் வந்த நிலையில், சட்டையை கழற்றி “இதை பார்த்தால் VFXல் வந்தது போல தெரிகிறதா?” என கேள்வி எழுப்பினார். உடனே அங்கு இருந்த  ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

unknown node

சட்டையை கழட்டியதை பார்த்த மேடையில் இருந்த நடிகைகளும் கையை தட்டிக்கொண்டு சிரித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் “கிசி கா பாய் கிசி கி ஜான்” திரைப்படம் வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node