நடிகர் சல்மான் கானுக்கு என்னாச்சு..? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது வரவிருக்கும் படமான ‘டைகர் 3’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று நடிகர் சல்மான் கானின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான பபுகைப்படத்தை சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் காயத்தின் வலியைக் குறைக்க அவர் பேண்டேஜ் அணிந்துள்ளது தெரிகிறது. “ஐந்து கிலோ எடையுள்ள டம்பல் தூக்கும் போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
Wen u think u r carrying the weight of the world on your shoulders , he says duniya ko chodo paanch kilo ka dumbbell utha ke dikhao .Tiger Zakhmi Hai . #Tiger3 pic.twitter.com/nyNahitd24
— Salman Khan (@BeingSalmanKhan) May 18, 2023
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சல்மான் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள். “சீக்கிரம் குணமடையுங்கள்,” என்றும் ஒரு ரசிகர் கருத்து தெரிவித்தார். மற்றோருவர் “உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்” என கூறி வருகிறார்கள்.

மேலும், டைகர் 3 ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும். இப்படத்தை இயக்குனர் மனீஷ் சர்மா இயக்குகிறார். இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.