மிக்ஜாம் புயல் பாதிப்பு – நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி.!

Cyclone Michaung - Siva Kartikeyan

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், நிலமை மெது மெதுவாக சீராகி வருகிறது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

அந்தவகையில், இன்று நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் உதயநிதியை சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதனை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி “மிக்ஜாம் புயல் கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள்,தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

மீண்டும் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்?

அன்பும் – நன்றியும் ஒன்றிணைந்து செயல்படுவோம் “என பதிவிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ள நிவாரண நிதி ரூ. 10 லட்சம் காசோலையை அளித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு நடிகர் சூர்யா-கார்த்தி முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, நடிகர் ஹரிஷ் கல்யாணம் ரூ. 1 லட்சம், kpy பாலா ரூ. லட்சம் என பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ganga Expressway IAF
pm modi - kerala port
Retro
ADMK Chief secretary Edappadi Palanisamy
Minister Anbil Mahesh
US Vice President JD Vance