மாஸ்டர் குட்டி பவானியை பாராட்டிய பெரிய பவானி..!!

Actor Vijay Sethupathi has praised actor Mahendran

நடிகர் மகேந்திரணை நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.

நடிகர் மகேந்திரன் தமிழ் சினிமாவில் நாட்டாமை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான மாஸ்டர் படத்தில் சிறிய வயது விஜய் சேதுபதியாக நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்று கூறலாம்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் மகேந்திரன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் கார் ஒன்றை வாங்கினார். அதற்கான புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அந்தக் காருடன் நடிகர் விஜய் சேதுபதியை அவரது இல்லத்தில் சந்தித்து உள்ளார் கார் வாங்கியதற்கு நடிகர் விஜய் சேதுபதி தனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதற்கான புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் மகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு என்னோட பவானி விஜய் சேதுபதி அண்ணா என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

unknown node