திருமணம் முடிந்து 2 மாதத்தில் விசேஷம்! அமலா பால் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கும் நடிகை தான் அமலா பால். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம்

Amala Paul

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கும் நடிகை தான் அமலா பால். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அது காதலாக மாறியது.

இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களின் மூலமே அறிவித்து விட்டார்கள். அதனை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.  திருமணம் முடிந்ததை தொடர்ந்து இருவரும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையே வெளியிட்டு வருகிறார்கள்.

கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் பாலியல் தொல்லை? தொகுப்பாளினி ஐஸ்வர்யா வேதனை!

இந்த நிலையில், நடிகை அமலா பால் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியதாவது அதில், ஜகத் தேசாய் உடன் என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதால் எங்களுடைய குடும்பம் 1+1 = 3 -ஆக ஆனது என”  குறிப்பிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அமலா பாலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் இனிமேல் நடிகை அமலா பால் படங்களில் நடிப்பது சந்தேகம் தான். கடைசியாக நடிகை அமலா பால் போலா திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது த்விஜா, லெவல் கிராஸ் ஆகிய மலையாள திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.