காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரனை துண்டு துண்டாக வெட்டி வீசிய நடிகை கைது!

A Kannada actress has been arrested for allegedly chopping off her brother along with her boyfriend and throwing them in different places as her brother objected to her love.

தனது காதலுக்கு சகோதரன் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் சேர்ந்து சகோதரனை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய கன்னட நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் ராகவன் பிரபு அவர்கள் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியாகிய கன்னட நாடக படமான ஜடம் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ஷனாயா கட்வே. இவருக்கு 32 வயது ஆகிறது. இவர் ஒன் நியாஸாஹேமத் எனும் 27 வயதுடைய நபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு அவரது சகோதரர் ராகேஷ் எதிர்ப்பு தெரிவிக்கவே காதலனுடன் சேர்ந்து தனது சகோதரரின் தொல்லையை ஒழிக்க வேண்டுமென முடிவு எடுத்துள்ளார்.

இதனை அடுத்து நடிகையின் காதலன் தனது உதவியாளர்கள் மூவருடன் சேர்ந்து ராகேஷ் வீட்டில் தனியாக இருந்த பொழுது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன் பின்பு அவரது தலையை சிதைத்து காட்டிற்குள் வீசியதுடன் அவரது உடலை துண்டு துண்டுகளாக நறுக்கி கட் ஆப் சாலை மற்ற பிற பகுதிகளிலும் வீசியுள்ளனர். அடையாளம் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக இவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ராகேஷின் தலை காட்டுக்குள் கிடந்ததை பார்த்த உள்ளூர்வாசிகள் இது ராகேஷின் தலை தான் என அடையாளம் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ராகேஷின் சகோதரி மற்றும் சகோதரியின் காதலரிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் தான் தங்களது காதலுக்கு எதிர்ப்பாக இருந்ததால் சகோதரனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த நடிகை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.