தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை எல்லி அவ்ரம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் சதீஷ், ரெஜினா, உள்ளிட்ட பலரு நடிப்பில் வெளியான ‘கன்ஜுரிங் கண்ணப்பன்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கும் ஹிந்தியில் சில படங்களில் நடித்திருந்த இவருக்கு தற்போது தமிழில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கன்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன்காக பேட்டி ஒன்றில் நடிகை கலந்து கொண்டார்.
விஜய் படத்தால் 8 வருடம் முடங்கிய சூப்பர் ஹிட் இயக்குனர்.!கப்பலேறி வந்து சேருவாரா?
அந்த பேட்டியில் அவர் தன்னுடைய காதல் தோல்வி குறித்தும் மனம் திறந்து பேசினார். இதுகுறித்து பேசிய அவர் எனக்கு முதன் முதலாக காதல் தோல்வி ஆனது உண்மைதான் நானும் ஒரு தப்பான ஒருவரை நம்பி ஏமாந்து போனேன். அவர் என்னுடைய வாழ்க்கையில் கடைசி வரையே இருப்பார் என்று கண்மூடித்தனமாக நம்பி அவரை நினைத்து ஏமாந்து விட்டேன்.
எங்கள் இருவருக்கும் செட் ஆகாத காரணத்தினால் நாங்கள் இருவரும் விலகி விட்டோம். இப்போது அவர் என்ன செய்கிறார் அவர் யார் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர் என்னை விட்டுப் போனது மிகவும் எனக்கு வேதனை அளித்தது. அந்த வேதனையில் இருந்து நான் மீண்டு வரவே பல நாட்கள் ஆனது. ஏனென்றால் முதல் காதல் தோல்வி என்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த அளவிற்கு எனக்கு வேதனை அளித்தது. அந்த வலிகளை எல்லாம் கடந்து தற்போது சினிமாவில் நடித்து வருகிறேன் எனவும் நடிகை வேதனையுடன்” கண்ணீர் விடாத குறையாக எல்லி அவ்ரம் கூறியுள்ளார்.
