அவதூறு கருத்து பரப்பியதாக கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார்..!

Actress Rohini complains against Kishore K Swamy for spreading slanderous comments ..!

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாகப் பதிவிட்ட கிஷோர் கே சாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து மேலும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்து சமூக வலைதளத்தில் இழிபடுத்தி பேசிய வழக்கில் மீண்டும் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது, ரகுவரனின் மனைவி மற்றும் நடிகையான ரோகிணி தன்னைப் பற்றியும், மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் சமூக வலைத்தளத்தில் கிஷோர் கே சுவாமி அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ரோகிணி புகார் அளித்துள்ளார்.