தற்போது சமந்தா தமிழ் படமான 96 ரீமேக்கில் நடித்து வருகிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா மற்றும் டிவி தொகுப்பாளினி ரம்யாவுடன் சாமி தரிசனம்.
தமிழ் திரையுலகம் மட்டுமில்லாமல் தெலுகு, மலையாளம் என பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை சமந்தா அனைவருக்கும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார். தற்போது பட வாய்ப்பு குறைந்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தும் சமந்தா, தமிழில் வெளியான விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 படத்தை தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா மற்றும் டிவி தொகுப்பாளினி ரம்யாவுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர்.
மேலும் பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்து வைத்தனர். இதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த நடிகை சமந்தாவுடன் ஏராளமான பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். பின்னர் அவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், சமந்தாவை பத்திரமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.