தொகுப்பாளினியாக களமிறங்கும் நடிகை சமந்தா.!

தெலுங்கில் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றினை சமந்தா தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றினை சமந்தா தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை சமந்தா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகர் நாக் சைதன்யாவை திருமணம் செய்த சமந்தா தற்போதும் படங்களில் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் தற்போது பிரபல டாக் ஷோ மூலம் தொகுப்பாளினியாகவும் சமந்தா களமிறங்க உள்ளார். தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள ‘சாம் ஜாம்’ எனும் டாக் ஷோவை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் முதல் விருந்தினராக நடிகர் விஜய் தேவர்கொண்டா கலந்து கெண்டுள்ளார் . மேலும் இந்த டாக் ஷோவில் சமந்தா 10 எபிசோட்களை தொகுத்து வழங்கவுள்ளார். அதற்காக இவர் ரூ. 1.5 கோடி சம்பளமாக வங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொகுப்பாளினியாக களமிறங்கும் நடிகை சமந்தா.!