நடிகை திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeபடம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அட்டகாசமாக உடை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.
unknown nodeஅதைபோல், படத்தின் ப்ரோமோஷனுக்காக த்ரிஷா டிவிட்டரில் குந்தவை எனும் பெயரை மாற்றினார். இதனால் அவருக்கு வழங்கப்பட்டு இருந்த ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. இதனால், சற்று அதிர்ச்சியில் உறைந்த த்ரிஷா மீண்டும் டிவிட்டரில் திரிஷா எனும் பெயரை மாற்றினார்.
unknown nodeஆனால், இன்னும் அவருக்கு ப்ளூ டிக் வரவில்லை. த்ரிஷாவை போல ஜெயம் ரவியும் டிவிட்டரில் அருள்மொழி வர்மன் என பெயரை மாற்றினார். அவருடைய ப்ளூ டிக்கும் பறிக்கப்பட்டுள்ளது. விரைவில் இருவருக்கும் ப்ளூ டிக் மீண்டும் வழங்கப்படும் என தெரிகிறது.
unknown node