இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
unknown nodeVikram100DaysCelebration [Image Source: Twitter ]
இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. படத்தின் வெற்றிக்கு கதை எந்த அளவிற்கு காரணமோ அதை அளவிற்கு அனிருத்தின் பின்னணி இசையும் மிகப்பெரிய காரணம் என்றே கூறவேண்டும்.
இதையும் படியுங்களேன்-மீண்டும் களத்தில் இறங்கிய கட்டழகி பிந்து மாதவி.! வெளியான கிக் ஏற்றும் புகைபடங்கள்…
unknown nodeVikram100DaysCelebration [Image Source: Twitter ]
இந்த நிலையில், விக்ரம் திரைப்படத்தின் வெற்றிவிழாவை கொண்டாடும் வகையில், விக்ரம் கூட்டணி மீண்டும் ஒரே மேடையில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, விக்ரம் படத்தின் வெற்றிவிழா வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeVikram100DaysCelebration [Image Source: Twitter ]
மேலும், இந்த விழாவில் மேலும் கமல்ஹாசன், மகேந்திரன் இரண்டு பெறும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த வெற்றிவிழாவில், “விக்ரம்” படத்தில் பங்களிப்பாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் கௌரவிக்கப்ப உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
RKFI celebrates the success of Ulaganayagan Kamal Haasan’s Vikram,directed by Lokesh Kanagaraj. The 100th-day celebration will be held on Ulaganayagan Kamal Haasan’s birthday, November 7,at 5pm in Kalaivanar Arangam.#Vikram100DaysCelebration #Ulaganayagan #KamalHaasan #VIKRAM100 pic.twitter.com/yN4hi1xBxG
— Raaj Kamal Films International (@RKFI) October 27, 2022