சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாகவம், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்றே கூறலாம். சமீபத்தில் கூட படத்தின் இயக்குனர் மந்திர மூர்த்திக்கு சசிகுமார் தங்க செயின் ஒன்றை பரிசாக கொடுத்தார்.
unknown nodeAyothi [Image Source : Google ]
என்னதான் தொடர்ந்து படங்களில் சசிகுமார் நடித்து வந்தாலும் கூட அவர் மீண்டும் படத்தை இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில், சுப்ரமணியபுரம்(2008), ஈசன்(2010) போன்ற ஹிட் படத்தை கொடுத்த சசிகுமார் எப்போதுதான் மீண்டும் படம் இயக்குவார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
unknown nodeM. Sasikumar [Image Source : Twitter]
இந்த நிலையில், அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தொடர்ந்து படம் நடித்து வந்த சசிகுமார், படங்களில் இயக்குவதில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது.
unknown nodeAnurag Kashyap and sasikumar [Image Source : Twitter]
இதனையடுத்து, தற்போது அவர் 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் படம் இயக்க உள்ளார். இந்த படத்தில் ‘இமைக்கா நொடிகள்’ வில்லன் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.