தந்தை உடல் நல்லடக்கம்.! கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய அஜித்...

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடலுக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடலுக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது

அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இந்த நிலையில், சற்று முன் அவரது இறுதிச் சடங்கு தொடங்கி நடைபெற்றது. தந்தையின் உடலை அஜித்தும் அவரது சகோதரர்களும் மின் மயானத்துக்குள் சுமந்து சென்றனர்.

இப்பொது, அங்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது தந்தையின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு, ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும் அஜித் அனைவரையும் கையெடுத்து கும்பிட்டபடி, காரில் ஏறி புறப்பட்டார்.

அஜித்தின் தந்தை மரணம்:

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உடல்நலக்குறைவு காரணமாக அஜித்தின் தந்தை சுப்ரமணியன் உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா, இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருப்பதாக கேட்டுக்கொண்டார். இந்நிலையில், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.