அஜித் பொங்கல் லோடிங்...'துணிவு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை ரிலீஸ் தேதி

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

அதன்படி, ‘துணிவு’ திரைப்படம் வரும் ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் ஏற்கனவே படத்திலிருந்து பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ள நிலையில், பொங்கலை துணிவு படத்துடன் கொண்டாட அஜித் ரசிகர்கள் காத்துள்ளனர்.

unknown node