ஐயோ...நடிகை குஷ்புவுக்கு என்னாச்சு..? திடீரென மருத்துவமனையில் அனுமதி.!

பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு காய்ச்சல் காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு காய்ச்சல் காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ள குஷ்பு  அதில் “நான் கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இருக்கிறேன். அது என்னைப் பாதித்துவிட்டது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றைக் கொன்றது.

உடலில் ஏற்படும் அறிகுறிகளைச் சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள், அதனைப் புறந்தள்ளி விடாதீர்கள். நான் கவனிக்காமல் விட்டதால் மட்டும் தான் எனக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது . விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன். பாதுகாப்பாக இருங்கள்” என டிவிட் செய்துள்ளார்.

unknown node

குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் தயவுசெய்து கவனித்து, விரைவில் குணமடையுங்கள் எனவும், விரைவில் குணமடையுங்கள் நீங்கள் வலிமையான பெண்” எனவும் கூறி வருகிறார்கள்.