சொகுசு கார் வாங்கிய வழக்கில் அமலபால் போலீசில் சரணடைந்தார் ..
unknown nodeயூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மற்ற மாநில சொகுசுகார்களை பதிவு செய்வது அதிகரித்து வந்தது. சொகுசு கார்களை வாங்கும் பிரபலங்கள், அதனை வேறொருவரின் பெயரில் புதுச்சேரியில் பதிவு செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
unknown nodeஇதில் மலையாளர் நடிகரும் எம்.பி-யுமான சுரேஷ்கோபி, நடிகர் ஃபகத் பாசில், நடிகை அமலாபால் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஃபகத் பாசில் 17 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வரியை உடனே கட்டியதாக தெரிகிறது.
unknown nodeஇந்நிலையில், நடிகை அமலாபால், சுரேஷ்கோபி ஆகியோர் இன்று குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜாராகினர். அமலாபால் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றுள்ளதால், சுரேஷ்கோபியை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …