தமிழில் உருவாக்கும் அனிமல் திரில்லர்.. தி நைட் கதையை கூறிய தயாரிப்பாளர்..!

Producer Kalasa J. Selvam has told the story of The Night starring Sakshi Agarwal in a recent interview.

சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள தி நைட் படத்தின் கதையை தயாரிப்பாளர் கலசா ஜே.செல்வம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் , ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் தற்போது ’சின்ட்ரெல்லா’ ’ஆயிரம் ஜென்மங்கள்’ ’டெடி’, ’அரண்மனை 3’ ’புரவி’ ஆகிய படங்களில் நடித்து வருவதுடன் ‘தி நைட்’ என்ற திரில்லர் பாணியில் உருவாகும் படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை ரங்கா புவனேஸ்வர் என்பவர் இயக்க ,அன்வர் கான் தாரிக் என்பவர் இசையமைக்க உள்ளார்.மேலும் இந்த படத்தில் சாக்ஷிக்கு ஜோடியாக வேத் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார் . தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பை தொடர்ந்து தி நைட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில்நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த நிலையில் படத்தை பற்றி படத்தின் தயாரிப்பாளரான கலசா ஜே.செல்வம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது, “நான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விடம் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினேன் அப்போதிலிருந்து ஹாலிவுட் பாணியில் ஒரு அனிமல் திரில்லர் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது எனக்கு மிகப்பெரிய ஆசையாக இருந்தது. இது தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக இருக்கும். சாக்ஸி அகர்வாலும் அவரது காதலரும் காட்டிற்குள் டிராக்கிங் செல்கிறார்கள் அப்போது அவர்கள் விலங்காக மாறிய வில்லனிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் இருவரும் எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதே கதை என்றும் கூறியுள்ளார்.