வேலன் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் கலைமகன் அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்த முகின் ராவ் அடுத்ததாக வெள்ளித்திரையில் “வேலன்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கவின் என்பவர் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு வெளியான நிலையில், அடுத்த அப்டேட்டாக படத்திற்கான மோஷன் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்த நிலையில், தற்போது அடுத்த அப்டேட்டாக படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி செப்டம்பர் 3-ஆம் தேதி மாலை மணிக்கு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்புடன் காத்துள்ளனர்.
unknown node