நடிகையும் பிரபல இயக்குநரான மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி சில படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்துள்ளார். முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே இவர் மணிரத்னத்தை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு சுஹாசினி கடந்த 1995-ஆம் ஆண்டு அரவிந்த் சாமியை வைத்து இந்திரா எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சுமாரான வெற்றியை பெற்றது. இந்நிலையில் , இந்த திரைப்படத்தை இயக்கும்போது சுஹாசினிக்கு உதவி இயக்குனராக பலர் பணியாற்றியுள்ளனர். சுஹாசினி படங்களை இயக்கி கொண்டிருந்த அந்த சமயத்தில் பிரபல இயக்குனரும், எழுத்தாளருமான பிருந்தா சாரதி மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்ற ஆசைப்பட்டுள்ளாராம்.
அந்த சமயம் பிருந்தா சாரதி மணிரத்னத்தின் வீட்டிற்கு சென்று தான் எழுதிய கவிதை புத்தகத்தை கொடுத்தாராம். வீட்டை விட்டு வெளியே வந்த சுஹாசினி உங்களுடைய இஷ்டத்துக்கு வந்து பெல் அடிக்கிறீங்க? என பேசினாராம். பிறகு பிருந்தா சாரதி தான் எழுதிய கவிதை புத்தகத்தை கொடுத்து மணிரத்னம் சார் கிட்ட கொடுங்க அவர் கிட்ட உதவி இயக்குனராக சேர ஆசை படுகிறேன் என கூறினாராம்.
அந்த சமயம் சுஹாசினி படங்களை இயக்குகிறார் என பிருந்தா சாரதிக்கு தெரியாத காரணத்தால் அவரிடம் எதுவும் சொல்லவில்லையாம். பிறகு சில நாட்கள் கழித்து பிருந்தா சாரதி எழுதிய கவிதை புத்தகம் நன்றாக இருந்த காரணத்தால் சுஹாசினி பிருந்தா சாரதியை தன்னுடைய படங்களுக்கு உதவி இயக்குனராக இருக்கீங்களா? என கேட்டுள்ளாராம்.
ஏற்கனவே தன்னிடம் பலர் உதவி இயக்குனர்களாக பணியாற்றி வருகிறார்கள் உங்களை வேண்டாம் என சொல்லவும் முடியவில்லை உங்களை உதவி இயக்குனராக வைத்து கொள்கிறேன் ஆனால், உங்களிடம் பேசமாட்டேன். ஏனென்றால், எனக்கு அதற்கு எல்லாம் நேரமே இல்லை என்னுடைய வேலையிலேயே நேரம் போய்விடுகிறது.
எனவே, உதவி இயக்குனராக இருங்கள் என சற்று கறராக பேசினாராம். இதனால் சற்று கடுப்பான பிருந்தா சாரதி அப்படி பட்ட வேலையே எனக்கு வேண்டாம் என கழட்டிவிட்டு சென்றுவிட்டாராம். இந்த தகவலை பிருந்தா சாரதியே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் பிருந்தா சாரதி கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான தித்திகுதே எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
