பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மஞ்சுவாரியர், கருணாஸின் மகன் கென் கருணாஸ், ஆடுகளம் நரேன், இயக்குனர் பாலாஜி சக்திவேல் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
unknown nodeஇப்படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெட்கை எனும் நாவலை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான வியாபாரம் தற்போது வேகமாக நடந்து வரும் வேளையில், தற்போது இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சார் செய்யப்பட்ட இப்படத்திற்கு யு/ஏ (U/A) சான்று வழங்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் துணையோடு குழந்தைகளும் இப்படத்தை பார்க்கலாம் என சான்று வழங்கப்பட்டுள்ளது.