தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான அட்லீ கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், பிரியா கர்ப்பமாக இருப்பதாக இயக்குனர் அட்லீ கடந்த 16-ஆம் தேதி அறிவித்திருந்தார்.
unknown nodeatlee priya [Image Source: Twitter ]
இதனை தொடர்ந்து இன்று அட்லீ – பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இயக்குனர் அட்லீயே தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodepriya atlee [Image Source: Twitter ]
இது குறித்து இயக்குனர் அட்லீ தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது ” அவர்கள் சொல்வது சரிதான் இந்த மாதிரியான உணர்வு உலகில் இல்லை அது போலவே எங்கள் ஆண் குழந்தை இங்கே உள்ளது! பெற்றோரின் புதிய அற்புதமான சாகசம் இன்று தொடங்குகிறது! நன்றியுடன். சந்தோஷமாக. பாக்கியம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
unknown nodeAtlee Kumar And Shah Rukh Khan [Image Source: Twitter ]
மேலும் இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் பாண் இந்திய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node