இயக்குனராக களமிறங்கும் அட்டகத்தி தினேஷ்...!!

Attakathi Dinesh will next make his directorial debut with Vairuda

அட்டகத்தி தினேஷ் அடுத்ததாக வயிறுடா என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

நடிகர் தினேஷ் தமிழ் சினிமாவில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக குக்கூ, விசாரணை, கபாலி, நானும் சிங்கிள் தான், போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் அட்டகத்தி தினேஷ் இயக்குனராக அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம், வயிறுடா என்ற திரைப்படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும், அதற்கான போஸ்டர் ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான டைட்டில் கொண்ட போஸ்டர் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.