ஆகஸ்ட் மாதம் வெளியாகும் வலிமை... வெளியான வெறித்தனமான தகவல்..!

It has been reported that the film crew is planning to release the movie 'Valimai' starring Ajith on August 12.

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும், அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் , ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும்,விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்துள்ளதாகவும் போனி கபூர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது ஆம், இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.