95வது ஆஸ்கார் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெற்று முடிந்த நிலையில், “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு ” பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் 95-வது ஆஸ்கர் விருதை வென்றது. அதுபோல இந்திய திரைப்படமான “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” க்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
unknown node95 oscar award [Image Source : Google ]
இந்த நிலையில், ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்த இரண்டு படக்குழுவுக்கும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சூர்யா ஆகியோர் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள்.
unknown nodeஅந்த வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவுக்கும், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கும் தனி தனியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலில் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் குனீத் மோங்கா, கார்த்திகி கோன்சால்வ்ஸ் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உத்வேகத்தின் வெள்ள வாயில்களைத் திறந்துவிட்டீர்கள்! ஜெய் ஹோ” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeஅதனை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த ரஹ்மான் ” ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி, சந்திரபோஸ் மற்றும் RRR படக்குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்; அனைவரும் எதிர்பார்த்ததுபோல தகுதியானவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது” என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.