இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் இயக்குனரும், நடிகருமான, செல்வராகவன், நடிகர் நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பகாசுரன்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி எஸ் இசையமைக்க படத்தை மோகன் ஜியே தயாரித்துள்ளார்.
unknown nodeBakasuran [Image Source : Google ]
ஏற்கனவே படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரைலர் வெளியாகி படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்பதை படத்தை பார்த்து விட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் கூறியுள்ள விமர்சனத்தை பார்க்கலாம்.
unknown nodeபடத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் ஒருவர் ” பகாசுரன் திரைப்படம் அருமையாக இருக்கிறது.படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோரின் நடிப்பு அருமை. சாம்சிஎஸ் இசையும் அருமை. படத்தின் மூலம் மோகன் ஜி நல்ல கருத்தை கூறியுள்ளார்” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeமற்றோருவர் ” பகாசுரன் மனித கடத்தல் பற்றிய பார்க்கக்கூடிய கதை செல்வராகவன் நடிப்பு அருமை. நட்டி வழக்கம் போல் அருமையாக நடித்திருக்கிறார். கதைக்களம் கண்ணியமான மேக்கிங்கால் மேம்படுத்தப்பட்டுள்ளது. உணர்ச்சிகள் நன்றாக & நேர்த்தியாக எழுதப்பட்ட கதாபாத்திரங்கள்” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeஇந்த திரைப்படமும் விமர்சனத்தை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக வெற்றிபெறும் என்றே கூறலாம். ஏனெனில் படத்தை பார்த்த அனைவரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே படத்திற்கு வசூல் ரீதியாகவும் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என தெரிகிறது.