நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர் முதன் முதலாக சுப்பிரமணியபுரம் என்ற படத்தையும் இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்நிலையில், இவர் மதுரையில் நடைபெற்ற கீழடி வைகை நதி நாகரீகம் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.அவர் பேசுகையில், கீழடி உண்மையில் வெற்றியடைந்ததற்கு காரணம் சு.வெங்கடேசன். தமிழ் கலாசாரத்தை, பண்பாட்டை தோண்டி எடுக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றும், 2015-ம் ஆண்டு அகழாய்வில் போதே கீழடியை நேரில் சென்று பார்த்ததாகவும் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், கீழடியில் ஒவ்வொரு விஷயமும் முக்கியமானது. அகழாய்வுக்கு பொறுமை தேவை. அந்த பொறுமையோடு அகழாய்வாய் மேற்கொண்டு வருகின்றனர். கீழடி நம் வரலாறு அதை வீட்டுக் கொடுக்கக்கூடாது. கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைத்தால் பொதுமக்கள் வரலாற்றை அறிந்து கொள்வார்கள் என்றும், அது சிறப்பாகவும் இருக்கும். மேலும், கீழடி நம் வரலாறு. அது பாடமாக வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கீழடி நம் வரலாறு! அது பாடமாக வர வேண்டும் : நடிகர் சசிகுமார்
நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர் முதன் முதலாக சுப்பிரமணியபுரம் என்ற படத்தையும் இயக்கியும், நடித்தும் உள்ளார்.