ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் 'பிக் பாஸ்' கதிரவன்...புது படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ.!!

பிக் பாஸ் 6-வது தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் கதிரவன். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதன் மூலம்

vj kathiravan

பிக் பாஸ் 6-வது தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் கதிரவன். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது என்று கூறலாம். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கதிரவன் ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, கதிரவன் “கூடு” எனும்  திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜாயல் விஜய் என்பவர் இயக்குகிறார். ஸ்கை மூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் எம் கணேஷ் மற்றும் கண்ணன் பி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

கூடு திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் கதிரவனுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

unknown node