கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் ஒவ்வொரு போட்டியாளர்களாக வருகை தந்துகொண்டு இருக்கிறார்கள்.

Featured image

சென்னை :பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது இன்று முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசன் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார் என்பதால் நிகழ்ச்சி மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

இன்று நிகழ்ச்சி தொடங்கி முதல் நாள் என்பதால் முதல் நாளில் பிரபலங்கள் ஒவ்வொருவேருக்கும் தனி தனியாகப் பாடல்கள் கொடுத்து நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து அவர்கள் விஜய் சேதுபதியிடமும் மக்களிடமும் நெகிழ்ச்சியாகவும் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள்

ரவீந்தர் சந்திரசேகர்

செளந்தர்யா நஞ்சுண்டான்

தீபக்

சத்யா

அர்னாவ்

அக்ஷிதா

சஞ்சனா

தர்ஷா குப்தா

ரஞ்சித்

கானா ஜெப்ரி

சுனிதா

பவித்ரா ஜனனி

விஜே விஷால்

ஆர்.ஜே.ஆனந்தி

பவித்ரா ஜனனி

அருண் பிரசாத்

ஜாக்லின்

முத்துக்குமரன்

எனவே, இன்று முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ள காரணத்தால், மக்கள் இனிமேல் பொழுது போக்குக்காகத் தினமும் பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கண்டு மகிழலாம்.