biggboss 3: இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு! நடந்தது என்ன?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து பாத்திமாபாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம் பெற்று வருகிறது. தற்போது, பிக்பாஸ் இல்லம் இருவேறு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள அனைவரும் கிராமத்து பெண்கள் போல சேலை அணிந்துள்ளனர். ஆண்கள் அனைவரும் வேஷ்ட்டி மற்றும் சரம் அணிந்துள்ளனர். பிக்பாஸ் வீடே தற்போது கலைக்கட்டியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025