கார்த்தி இல்லாமல் பையா 2.? ஹீரோ யார் தெரியுமா.? வெளியான ஷாக்கிங் தகவல்.!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட்டானது என்று கூறலாம். இந்த திரைப்படத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம் அந்த அளவிற்கு அருமையான காதல் காட்சிகளை  இயக்குனர் லிங்கு சாமி கொடுத்திருப்பார்.

unknown node

Paiyaa [Image Source: Twitter ]

படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருப்பார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்தை இயக்குனர் லிங்கு சாமி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

Paiyaa 2 [Image Source: Twitter ]

இரண்டாவது பாகம் உருவாகிறது என்றால் ஒரு சந்தோஷமான விஷயம் தான். ஆனால், இதில் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம் என்னவென்றால், பையா படத்தின் இரண்டாவது பாகத்தில் கார்த்தி ஹீரோ இல்லயாம். அவருக்கு பதிலாக நடிகர் ஆர்யா தான் நடிக்கிறாராம். படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறாராம்.பையா 2 படத்தில் ஆர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதாகவும், தகவல்கள் கசிந்துள்ளது.

unknown node

Paiyaa2 [Image Source: Twitter ]

மேலும், இந்த செய்தி கார்த்தி ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால், பையா படத்தில் கார்த்தியை விட யாருமே செட் ஆகமுடியாது என்பது போல ஒரு அருமையான நடிப்பை கொடுத்திருப்பார். ஆனால், தற்போது பையா 2-வில் அவர் இல்லாதது சோகமான விஷயம் தான். மேலும் ஏற்கனவே லிங்கு சாமி இயக்கத்தில் ஆர்யா வேட்டை திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.