அஜித்துக்கு பிளாக்பஸ்டர்...உலக முழுவதும் "330 கோடி" வசூலை கடந்த 'துணிவு'.!

உலக அளவில் 330 கோடி வசூலை அஜித்தின் துணிவு திரைப்படம் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக அளவில் 330 கோடி வசூலை அஜித்தின் துணிவு திரைப்படம் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “துணிவு” இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கோக்கன், ஜி. எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

unknown node

AjithKumar Thunivu [Image Source : Twitter]

படத்தை போனிகபூர் தயாரிக்க , படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருந்தார். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்றே கூறலாம். படத்தை பார்த்த பலரும் படத்தை பாராட்டினார்கள் என்றே கூறலாம்.

unknown node

Thunivu [Image Source : Twitter ]

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை உலக முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

unknown node

ThunivuOnNetflix [Image Source: Twitter ]

அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 330 கோடி வசூல் செய்துள்ளதாம். அஜித்தின் சினிமா கேரியரில் அதிகம் வசூல் செய்த திரைப்படமும் இந்த திரைப்படம் தான் என்ற சாதனையும் படைத்துள்ளது. மேலும், துணிவு திரைப்படம் கடந்த 8-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.