பொன்னியின் செல்வன் 'ஆஸ்கர்' விருதுக்காக எடுக்கப்படவில்லை...இயக்குனர் மணிரத்னம் அதிரடி பேச்சு.!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

PS2 [Image Source : Twitter]

அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் இயக்குநர் மணிரத்னம்  விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி,  த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா,  ஆகிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

unknown node

அப்போது பேசிய மணிரத்னம்  ” ஆர்.ஆர்.ஆர் திரைபடம் ஆஸ்கார் விருது வென்றது பெருமையான விசயம் தான். பொன்னியின் செல்வன் படத்தை ஆஸ்கார் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. மக்களிடம் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்.

unknown node

பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து, இனி வரும் காலங்களில் பொன்னியின் செல்வன் படத்தை போன்று வரலாற்று படங்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது என நான் நம்புகிறேன். கல்கியின் நாவலை திரையில் காட்டவில்லை கல்கி என்ன எழுதினாரோ அதை வைத்து தான் படம் எடுத்துள்ளேன்” என கூறியுள்ளார்.