இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. தில் ராஜு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
unknown nodeVarisu Pongal [Image Source: Twitter]
குடும்ப செண்டிமெண்ட் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
unknown nodeVarisu [Image Source: Twitter ]
இந்நிலையில், படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் பலரும் டிவிட்டரில்#VarisuHits100Crஎன்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த தகவல் உண்மை என்றால் பட தயாரிப்பு நிறுவனமே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது.
unknown nodeVarisuPongalWinner [Image Source : Twitter ]
தமிழக்தில் மட்டும் படம் 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது . நாளை பொங்கல் பண்டிகை, அதனை தொடர்ந்து தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.